தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதே போல், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.இதையும் படியுங்கள் : மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களே இனி இலக்கு - ஈரான்... ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான எச்சரிக்கை