ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையிலும், திருப்பதியிலும் தொடர்ந்து இடைவிடாது, கன மழை பெய்தது. இதனால் சுவாமி தரிசனத்திற்காக வரிசைகளில் இருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். பல பக்தர்கள் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள சுற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல், மடங்களில் தஞ்சம் அடைந்தனர். கன மழை காரணமாக கோயிலுக்கு முன்பும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இதேபோன்று திருப்பதியில் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் தேங்கியது.ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்த நிலையில் அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.