ஆந்திர மாநிலம் திருப்பதி உட்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டதையடுத்து திருப்பதி மலைக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதை மூடப்பட்டது. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விரைந்து செயல்பட, திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி தலைமையில் 15 பேர் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.