தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மற்றும் வட மாவட்டங்கள் உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் எனக் கூறிய வானிலை மையம், 5-ந் தேதியன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 6-ந் தேதியன்றும் 22 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.