நெல்லை, தென்காசி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் 12 ஆம் தேதி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதியும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. இதையும் பாருங்கள் - பிரேக் விட்டு மிரட்டும் மழை - தமிழ்நாட்டில் அலெர்ட் எங்கெல்லாம் மழை? | WeatherUpdate | RainNews