கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 20 க்கும் மேற்பட்ட லாரிகள் மழை வெள்ளத்தில் சிக்கின. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறு, குளங்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் குமராசாமி மலையில் பெய்த கனமழையால் சந்தூர், நந்திஹள்ளி பகுதியில் உள்ள மைன்ஸ் ஆலை பகுதியில் தண்ணீர் ஆறு போல் ஓடி, அங்கு நிறுத்தப்பட்ட லாரிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.