உத்தரகாண்ட் மாநிலத்தில், கொட்டித் தீர்த்த கன மழையால், தாம்சா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டேராடூனில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்சா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல வீடுகள், சாலைகள் இடிந்து விழுந்தன. கடைகள் அடித்து செல்லப்பட்டன. மகாதேவ் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. அதிகாலை 5 மணி முதல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, கோயில் வளாகம் முழுவதும் நீரில் மூழ்கியது. இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:டேராடூனில் பெய்த கனமழையால், சில கடைகள் சேதமடைந்துள்ளன. மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிகாரிகளுடன் தொடர்ந்து, தொடர்பில் இருக்கிறேன். மேலும், நிலைமையை கண்காணித்து வருகிறேன். இவ்வாறு முதல்வர் புஷ்கர்சிங் தாமி கூறி உள்ளார். டேராடூனில், சராசரியாக மணிக்கு 15 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 62 முதல் 87 கிமீ வரை பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் ’ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.இதையும் பாருங்கள்; @NewsTamil24X7TV வெள்ளத்தால் பயணிக்கமுடியாமல் சிக்கிய லாரிகள் | Rishikesh | Uttarakhand Flood