டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடும் பனிப் பொழிவால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவு அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்