உலகின் பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகளில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்களுடன் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.