சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ஹே மின்னலே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.இப்படம் வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் வரும் ஹே மின்னலே என்ற பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஸ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர்.