ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிர்த்தியாகம் வீண்போகாது எனவும், எதிரிகளை தோற்கடிப்போம் எனவும் ஈரான் நாட்டின் சுப்ரீம் தலைவர் கொமேனி தெரிவித்துள்ளார். ஜூம்மா தொழுகையின் போது நடந்த பிரசங்கத்தில் பேசிய அவர், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் நியாயமானது என குறிப்பிட்டார். மேலும் தங்களது நிலத்தை ஆக்கிரமித்து வாழ்வை நாசப்படுத்தியவர்களுக்கு எதிராக போராடும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உண்டு என்ற அவர், தற்போது இஸ்ரேல் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சிறிய தண்டனை தான், தேவைபட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என கூறினார்.