அரசு பள்ளிகளில் இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்று அரசு தீர்மானித்து விட்டதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தாண்டிற்கான தேர்வுகளின் பட்டியலில், ஆசிரியர் தகுதித்தேர்வு இடம்பெறாததால் அதனை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பட்டதாரிகளின் நம்பிக்கையை அரசு சிதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.