கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்திலிருந்தின் போது இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்தை விட்டு அழுது கொண்டே வெளியேறினார். துபாயில் சர்வதேச மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 29 ரன்களை விலாசிய போது, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மைதானத்தை விட்டு அழுது கொண்டே வெளியேறினார். இருப்பினும், இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.