யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.