சமூக நன்மைக்காக விஜயகாந்த் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளை சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்வார்கள் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் விஜயகாந்தின் நட்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பிரதமர், ”தனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.