நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்குநர் என்று, திரைத்துறையில் பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ், தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு காலையிலேயே ’சர்ப்ரைஸ்’ தரும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், வாழ்த்து கூறி உள்ளார். "ஹேப்பி பர்த்டே மாஸ்டர் - லவ் யூ” என்று ரஜினி வாழ்த்தியதால், உச்சகட்ட சந்தோஷத்துக்கே சென்ற ராகவா லாரன்ஸ், ரஜினி வாழ்த்திய ஆடியோவை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.