ஒரே நாளில் சற்று ஆறுதல் ஏற்படுத்திய ஆபரணத் தங்கத்தின் விலை, நண்பகலில் அதிர்ச்சியை தந்தது, மீண்டும் ஒருகிராம் தங்கம் 10 ஆயிரம் ரூபாயை தாண்டியது.இன்று செப்டம்பர் 8ஆம் தேதி திங்களன்று, வார தொடக்கத்தின் முதல்நாள் காலை, 280 ரூபாய் குறைந்த தங்கம் விலை, மதிய நேரத்தில் சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 10,000 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 1,600 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை காலை சற்று குறைந்தது ஒரு சவரன் - ரூ. 280 குறைவு ஒரு கிராம் - ரூ. 9,970ஒரு சவரன் - ரூ. 79,760மதிய நேரத்தில் பேரதிர்ச்சி தந்த தங்கம்ஒரு சவரன் - ரூ.720 உயர்வு ஒரு கிராம் - ரூ.10,060ஒரு சவரன் - ரூ. 80,480வெள்ளி விலையும் அதிகரிப்பு: ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மதியம் 3 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதையும் கேளுங்கள்; தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை | Gold News | Gold Update | Gold Price