ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்த உள்ளனர். நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றுகளில், லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி பெகுலாவும், ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி இகா ஸ்வியாடெக்கும் வெற்றி பெற்றனர்.