போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுவிக்க உள்ளது. அதன்படி 3 பிணைக்கைதிகளின் பெயரையும் ஹமாஸ் அறிவித்துள்ளது. யாஹர் ஹரன், அலெக்சாண்டர் ருபெனோ, சஹொய் டிகெல் ஷென் ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்கிறது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.