பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 4 லட்சத்து 88 ஆயிரத்து 876 மாணவர்கள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இதில் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான நிலையில், மார்ச் 14 ஆம் தேதி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாக உள்ளது. ஹால் டிக்கெட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு விநியோகிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.