news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news H-1B விசா கட்டண உயர்வு ரத்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

H-1B விசா கட்டண உயர்வு ரத்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

டிரம்ப் உத்தரவுக்கு தடை விதிப்பு

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

H-1B விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்திருந்த கட்டண உயர்வை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. சட்டத்துக்கு புறம்பான செயல் என நீதிபதி கருத்து கூறி உத்தரவிட்ட நிலையில், இந்தியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

விசாக்களுக்கு கட்டண உயர்வு
அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக, எச்​-1பி விசா வழங்​கப்​படு​கிறது. குறிப்​பாக, தொழில்​நுட்ப நிறு​வனங்​களான ஐ.டி. துறையில், திறமை​யான வெளி​நாட்டு ஊழியர்​களை பணி​யமர்த்த இந்த விசா பயன்​படு​கிறது. குலுக்​கல் முறை​யில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்​கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்-1பி விசா கட்டணத்தை சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த விசாவை பெறு​பவர்​களில் பெரும்​பாலானவர்​களான இந்​தி​யர்​கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

20 மாகாணங்களில் வழக்கு
இந்த சூழலில், எச்-​1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்​யக் கோரி அமெரிக்​கா​வின் 20 மாகாண அரசு சார்​பில், மாசச்சூசெட்ஸ் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. அப்போது பல்வேறு வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் அளித்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது;

அமெரிக்க பேரவையின் அனுமதியின்றி அதிபர் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இதனை, இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டறிந்து உள்ளது. இதனால், இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்ட விரோதமானது என நீதிமன்றம் அறிவிக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் 38% குறைவு
அமெரிக்காவில், எச்-1பி விசா கட்டண உயர்வால், அதற்கான விண்ணப்பங்கள் தற்போது குறைந்தது. கடந்த பிப்ரவரி மாத தகவலின்படி, எச்-1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை 85 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்1பி விசா கேட்டு விண்ணப்பித்தனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் குறைந்தது. இந்தச் சூழலில் இந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்து உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்யும் என கூறப்படுகிறது.

Related Link
தொடரும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

தொடரும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
3 hrs 8 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved