ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட தீபா கர்மாகர், தனது 31வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். நீண்ட யோசனைக்குப் பிறகே ஜிம்னாஸ்டிக்சில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாக கூறிய அவர், உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்றது மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டது மறக்க முடியாத தருணம் என்றார். ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை, காமன்வெல்த் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற தீபா கர்மாகர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.