ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியவுடன், அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்தது.இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.பதற்றம் சூழ்ந்து கொண்டதால், ஈரான் நாட்டின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.