திருவோண தினத்தில் கேரள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ஓணம் வாழத்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவரும் உற்சாகமாக ஒணத்தை கொண்டாட வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சமாதானம், வளமை மற்றும் நலன் சிறக்கட்டும் எனவும், ஓணம் பண்டிகை கேரளாவின் பெருமைமிகு கலாச்சார கொண்டாட்டமாக திகழ்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.உலகெங்கிலும் இருக்கும் மலையாள மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடும் ஓண நாளில் தமது வாழ்த்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.