இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மிகச் சிறந்த தருணம் என மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அசாதாரண வெற்றிக்கும், திறமை, அமைதி மற்றும் அணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வெற்றி"மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்கள் பெரிய கனவுகளைக் காணவும், நம்பிக்கையுடன் தங்கள் இலக்குகளைத் துரத்தவும் ஒரு உத்வேகமாக இருக்கும் என, இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்."மொத்த நாட்டிற்கும் ஒரு உண்மையான வரலாற்று நாள்"ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய மகளிர் அணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரு உண்மையான வரலாற்று நாள் என, நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.இதையும் பாருங்கள் - இந்திய மகளிர் அணிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து | women's world cup final | India vs South Africa