ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. பாரதீப் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் படகுகளில் ஒன்று திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயானது அடுத்தடுத்த படகுகளுக்கும் பரவியது. இதில் 17க்கும் மேற்பட்ட படகுகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகின.