டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்து பேசினார். அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.