தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பிடிக்காது என்றும், அவருக்கு பிடித்தது மன்னிப்பு மட்டும் தான் எனவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திராவிடக்கருத்தியல் ஆசிரியர் சங்கம் தொடக்க விழாவில் பேசிய அவர், திராவிட இயக்கம் பல ஆண்டுகளாக பாடுபட்டு பல பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்தால், அங்கு சில சங்கிகள் ஆரியம் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.