தமிழ்நாடு அரசு முதல் முறையாக மாநிலத்தின் நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. வரும் மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே இந்த பொருளாதார ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் நிலை உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.