ஆண்டுக்கு 10 ஆயிரத்து 701 அரசு வேலைவாய்ப்புகள் என்பது இளைஞர்களின் கனவை எப்படி நனவாக்கும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக சுமார் 60 லட்சம் பேர் காத்திருப்பதாக தெரிவித்துள்ளவர், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.