வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டவர் கட்டுப்பாட்டு மையத்தின் புகார் எண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசி பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்தார்.