கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. மகளிருக்காக கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டதற்கு பிறகு, கர்நாடக போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் ஜனவரி 5 ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் நிலையில், அடிப்படை கட்டணம் 6 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.