கர்நாடகாவில், மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டு, ஆடைகளை கழற்றி பரபரப்பை ஏற்படுத்தினார். மாண்டியா மாவட்டத்தில், கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்து நிலையத்தில், ஒரு பேருந்து ஓட்டுனர் மதுபோதையில் வந்து வெறித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது ஆடைகளைக் கழற்றிவிட்டு, பேருந்து நிலையத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டார். ஓட்டுநரின் நடத்தையைக் கண்டு, பெண் பயணிகள் அதிர்ச்சியடைந்து, தலைகுனிந்து சென்றனர். அவரது செய்கையை பார்த்து, அங்கிருந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவரைக் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.