அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஜே.சூர்யா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் வரும் 18-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.