துபாயில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில், சூப்பர் பைக்கான Hayabusa, சுத்த தங்கத்தில் modify செய்து காட்சிப்படுத்தப்பட்டது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் விலை ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக், மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதசூப்பர் பைக் பிரியர்களுக்கு, Hayabusa வெறும் மோட்டார் பைக் அல்ல, இது ஒரு உணர்வு. வேகம், ஸ்டைல் மற்றும் சூப்பர் சக்திக்கு பெயர் பெற்ற இது, உலகம் முழுவதும் உள்ள பைக் ஓட்டுநர்களுக்கு ஒரு கனவு பைக். ஆனால், இந்தக் கனவை எடுத்து, சுத்த தங்கமாக மாற்றுவதை கற்பனை செய்து பார்த்தால், பரவசம் தான். ஒவ்வொரு வாகன உதிரி பாகமும் சுத்த தங்கமாக காட்சி தருகிறது. துபாயில் நடைபெற்ற இந்த மோட்டார் கண்காட்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, இது தான். தங்க நிற Hayabusaவைக் காட்டும் காட்சி, வாகன ஓட்டிகளையும், ஆடம்பர பிரியர்களையும் மெய் மறக்கச் செய்துள்ளது.