ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. சென்னையில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 170 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 2ஆவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. நேற்றைய விலை நிலவரம் சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று காலை, பிப்ரவரி 6ஆம் தேதி, ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்திருந்தது. ஆனால், நேற்று பிற்பகலில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,040 என மீண்டும் உயர்ந்தது.இன்றைய விலை நிலவரம் சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று பிப்ரவரி 7ஆம் தேதி காலை, பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,360 ஆக இருந்தது. உச்சத்தில் வெள்ளி விலை வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.285க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ரூ.2,85,000க்கும் விற்பனை ஆனது. தங்கம் இறக்குமதியில் இந்தியா முன்னணிசர்வதேச அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால் உலக பொருளாதாரம், அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு, சர்வதேச பங்குச் சந்தைகளின் முதலீடு ஆகியன தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே, தங்கத்தின் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் கூறி உள்ளனர். Related Link ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.20 கோடி?