அடுத்த ஆண்டில் தங்கத்தின் விலை கணிசமாக உயரும் என சர்வதேச தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என சொல்லப்படும் நிலையில், நடப்பு ஆண்டில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி கையிருப்பில் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.