ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலையில், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 அதிகரித்துள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை காலையில் சற்று குறைந்த நிலையில் பிற்பகலில் உயர்வை கண்டது. ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாயாக இருந்தது. இன்றைய காலை விலை சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில், வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 20,000 ரூபாய் சரிந்த நிலையில் 2 லட்சத்து 80,000 ரூபாயாக இருந்தது. உயர்ந்து வரும் தங்கம் சமீப காலமாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆறுதல் தரும் விதமாக, கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த 2 நாளில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.15,200 குறைந்து சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19,200க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ.950 குறைந்து, ரூ.13,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனை ஆனது. இன்றைய காலை விலை நிலவரம் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.2 லட்சத்து 80,000 ஆக இருந்தது. ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்த தங்கம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலையில், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 அதிகரித்துள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை காலையில் சற்று குறைந்த நிலையில் பிற்பகலில் உயர்வை கண்டது. ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாயாக இருந்தது. Related Link தூய்மைப் பணியாளரை பாராட்டிய ரஜினி