தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.