சென்னையில், இன்று காலையில் விலை உயர்ந்த மூன்றே மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்து, புதிய உச்சம் தொட்டது ஆபரணத் தங்கத்தின் விலை. இன்று மட்டும் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 4,120 ரூபாய் உயர்ந்து, 1 லட்சத்து 15,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சிசென்னையில், இன்று ஜனவரி 21ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் ஒரு சவரனுக்கு 1,320 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. நேற்றைய விலை நிலவரம் சென்னையில், நேற்று முன்தினம் ஜனவரி 19ஆம் தேதி, தங்கத்தின் விலை கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,07,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 318 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு, 8,000 ரூபாய் அதிகரித்து, 3.18 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. நேற்று ஜனவரி 20ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாயாக இருந்தது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 610 ரூபாயாக இருந்தது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 3 மணி நேரத்தில் அதிர்ச்சி இந்நிலையில் இன்று ஜனவரி 21ஆம் தேதி காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காலையில் ஒரு சவரனுக்கு 2800 ரூபாய் அதிகரித்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் ஒரு சவரனுக்கு 1,320 ரூபாய் உயர்ந்தது. இதன்படி, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 14,415 ரூபாயாக இருந்தது. ஒரே நாளில் காலையிலேயே 2 முறை தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு சவரனுக்கு 4,120 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கத்துடன் போட்டியிடும் வெள்ளிகாலையில் மாற்றிமின்றி ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 340 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஆனால், நண்பகல் 1 மணிக்கு வெள்ளி விலை, ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதையும் பாருங்கள் - திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்