’ஜெட்’ வேகத்தில் தங்கத்தின் விலை சென்று கொண்டிருப்பதால், நடுத்தர மக்கள் ஆபரணத்தங்கம் வாங்கும் நிலை, கானல் நீராக மாறி உள்ளது. எவ்வளவு ஆடம்பர பொருள் கொட்டிக் கிடந்தாலும் தங்கத்தின் மீதான நம் தாய்மார்களின், ஆர்வம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு குண்டு மணி அளவிலாவது, தங்கத்தை வாங்க வேண்டும் என்று, ஆர்வத்துடன் நகைகள் மீது சொக்கிக் கிடந்தவர்கள் தற்போது மனம் வெதும்பி உள்ளனர். காரணம், ஒரு கிராம் 10,000 ரூபாயை கடந்து விட்டது. செப்டம்பர் 6ஆம் தேதி வெற்றிகரமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரத்து ஐந்து ரூபாய்.அத்தியாவசிய தேவைக்காக தங்கம் வாங்குவோரை மட்டுமல்லாமல், கையில் பணத்துடன், ஆடம்பரத்துக்காக வாங்குவோரையும் தலை சுற்ற வைத்துள்ளது. முதலீடு செய்ய முடிவு எடுத்தவர்களை கூட மூச்சு முட்ட வைத்துள்ளது. சென்னையில, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 10,005 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆக மொத்தம், ஒரு சவரனுக்கு இனி ஒரு லட்சம் ரூபாயை எண்ணி வைக்க வேண்டும். அதெப்படி, 80 ஆயிரம் ரூபாய் தானே வரும் என்று யோசிக்காதீர்.செய்கூலி உண்டு, சேதாரம் உண்டு, இத்துடன் ஜிஎஸ்டி உண்டு. ஆக ஒரு சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை வைக்க வேண்டும். . ஜிஎஸ்டி 2.0ன்னு கூறினார்கள். கார், பைக் போன்ற பல பொருள்களோட விலை குறையும்ன்னு சொன்னார்கள். தங்கம் விலை குறையாதா?குறைய வில்லையே, இதுதான் நடுத்தர மக்களின் மனக்குறை. தங்கத்தின் மீதான வரி விதிப்பு எப்படி? தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி 3% ஆக தொடரும்ன்னு சொல்லிவிட்டனர். இந்த 3% வரி, தங்கக் கட்டி, நாணயங்கள் மற்றும் நகைகளுக்குப் பொருந்தும். ஆனாலும், ஆபரணத் தங்க நகைகளை வாங்கும் போது கூடுதலாக ஒரு வரி விதிக்கப்படுகிறது. எதற்கு தெரியுமா? தங்க நகைகளுக்கான செய்கூலி என்று கூறப்படும், making charges மீது, 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது... அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்க கட்டி அல்லது தங்க நாணயம் வாங்கினால், 3 சதவீத ஜிஎஸ்டி ஆக 3 ஆயிரம் ரூபாயை சேர்த்து, மொத்தமாக, ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதுவே, 22 காரட் ஆபரண தங்கமா இருந்தால்...செய்கூலி 10 ஆயிரம் ரூபாய் என்றால், செய்கூலிக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமா 500 ரூபாய் சேர்த்து, 3 ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டும். ஆக ஒரு லட்சத்துக்கு நகை வாங்கினால், ஜிஎஸ்டி 3 ஆயிரம் ரூபாய், செய்கூலி 10 ஆயிரம் ரூபாய், செய்கூலிக்கு ஜிஎஸ்டி 500 ரூபாய்ன்னு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாய் வைக்க வேண்டும். இது மட்டுமின்றி, சில கடைகளில், மதிப்பு கூட்டல்ன்னு சொல்லிட்டு, அதாவது Value Additionன்னு சொல்லிட்டு, Wastage கட்டணத்தையும் சேர்த்து விடுகின்றனர். சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப, தங்கம் விலை கணக்கிடப்படுகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை யார் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், 2025 ஜனவரி ஒன்றாம் தேதி தங்கம் ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய். கடந்த 8 மாதங்களில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 22 ஆயிரத்து 840 ரூபாய் என்று, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தங்கத்தை கண்ணால் தான் காண முடியுமா? ஏங்கிக் கிடப்பது ஏழை மக்கள் தானே?இதையும் பாருங்கள்... ஒரு பவுனுக்கு ஒரு லட்சம் வைக்கணுமே.. #goldmarketupdates #goldprice #goldpricehike #tamilnadunews