கோ கோ உலகக் கோப்பையில் தென் கொரியாவை எதிர்த்து விளையாடிய இந்திய மகளிர் அணி 157 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள், கொரியாவை 2 முறை ஆல் அவுட் செய்து 22 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர். இறுதி வரை கொரியாவுக்கு வாய்ப்பளிக்காமல் 175-க்கு 18 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.