கேரளா மாநிலம் கோட்டயம் அருகே, காவல் அதிகாரி சீருடை அணிந்து மிடுக்காக வருகை தந்த சிறுமி, காவல் நிலையத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். பத்தணம்திட்டா மாவட்டத்தில் உள்ள தும்பமண் பகுதியை சேர்ந்த சாஜன்- மெர்லின் தம்பதியின் ஒரே மகளான 9- வயதான சேரா மேரி சாஜன், சிறுவயது முதல் காவல்துறை மீது ஆர்வம் கொண்டிருந்ததால், அவரது பிறந்தநாளுக்கு பெற்றோர் காவல்துறை சீருடையை பரிசாக வழங்கினர். அந்த உடையுடன் கோட்டயம் அருகே உள்ள காந்திநகர் காவல் நிலையத்திற்கு கம்பீரமாக வந்த சிறுமி, அங்கிருந்த காவலர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.இதையும் படியுங்கள் : குடிநீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வருவதாக புகார்... குடிநீரால் காய்ச்சல், தோல் அரிப்பு ஏற்படுவதாக வேதனை