"லெஜண்ட் அவரே(ஏ.ஆர்.ரகுமான்) பயன்படுத்திய ஒன்று... இதை விடச் சிறந்த பரிசாக எதைக் கேட்க முடியும்" என நெகிழ்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.அப்படி என்ன கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான்?71ஆவது தேசிய விருதுகளில், சிறந்த இசையமைப்பாளர் (பாடல் பிரிவு) விருதை வென்றார் ஜி.வி.பிரகாஷ். இது அவர் வாங்கும் இரண்டாவது தேசிய விருது.தமிழ் சினிமாவில் தனது மாமாவும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமான் இசையில், 'ஜென்டில்மேன்' படத்தில் ’சிக்கு புக்கு ரயிலு... என ஆரம்பித்து, 2006ல், ‘வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ். 'வாத்தி' படத்திற்கு இசையமைத்ததற்காக கிடைத்த 2ஆவது தேசிய விருதை பாராட்டி, தன்னுடைய தாய் மாமாவான ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு குறித்து, மிகவும் எமோஷ்னலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தான் பயன்படுத்திய பியானோவை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து, "நான் பெற்றதிலேயே மிகச் சிறந்த பரிசு இதுதான். இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த அழகான வெள்ளை பியானோவை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்" எனப் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "மிக்க நன்றி சார். இது மிகவும் அர்த்தமுள்ள ஒன்று" என்று மகிழ்ந்துள்ளார். மேலும், "இந்தப் பியானோ லெஜண்ட் (ரஹ்மான்) அவரே பயன்படுத்திய ஒன்று. இதை விடச் சிறந்த பரிசாக எதைக் கேட்க முடியும்" என்றும் நெகிழ்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.