தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நியாயமான முறையில் நடைபெறவில்லை என தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு.எஸ்ஐஆர் பணிகளால் யாருக்கும் ஓட்டுரிமை இல்லை என்ற நிலை வந்தாலும் வரும் என்றும் எச்சரிக்கை.படிவங்களில் நிறைய குழப்பங்கள் இருப்பதால் எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்ப்பதாக விஜய் விளக்கம்.புதிய வாக்காளர்களையும், ஓட்டு இல்லாதவர்களையும் சேர்த்தால் போதாதா? என்றும் கேள்வி.தமிழகத்தில் உள்ள சுமார் ஆறரை கோடி வாக்காளர்களுக்கு ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை எப்படி விநியோகிக்க முடியும்? என விஜய் கேள்வி.வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் போது வீடு பூட்டியிருந்தால் வாக்குகள் பறிபோகும் நிலை உள்ளதாகவும் எச்சரிக்கை. தவெகவினருக்கு SIR விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை என விஜய் பகீர் புகார். தமிழ்நாடே வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும் என மக்களுக்கு அழைப்பு.வரும் சட்டமன்ற தேர்தலில் GEN Z வாக்காளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என விஜய் பேச்சு. பலமான ஆயுதம் ஓட்டு என்ற ஒன்று இருந்தால் தான், நாட்டை காப்பாற்ற முடியும் என GEN Z வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்.