போர் நிறுத்தம் தொடர்பாக புதினின் அழைப்பை ஏற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் சுமார் மூன்றாண்டுகளை கடந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இந்த சூழலில் தான், துருக்கியில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உக்ரைன் அதிபருக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சந்திப்பானது வரும் 15 ஆம் நிகழ வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.