மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் ((gbs)) நோயால், மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் நோய்தொற்று பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், சமீப காலமாக புனேவில் அதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது.