அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபடி அவர் காசாவை கைப்பற்றினால், அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று உருவாக்கப்பட்ட ஏ.ஐ வீடியோ சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. Gaza 2025 என்ற தலைப்பில் வலம் வரும் அந்த வீடியோவில் தங்கத்தாலான ட்ரம்பின் பிரம்மாண்ட சிலை, கடற்கரை சுற்றுலாத்தலங்கள், சொகுசு படகுகள், அடுக்குமாடி கட்டடங்கள் காசாவில் நிரம்பியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் உணவருந்துவது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகுவும், ட்ரம்பும் கடற்கரையில் காக்டெயில் அருந்துவது போலவும் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.