ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் படத்தை ஏகே பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.