நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இதில் ராஜேஸ்வரி, ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர்.